காங்கிரஸ் கட்சி ஒரு பழயை கட்சி, மூழ்கும் கட்சி. அதில் பயணம் செய்பவர்களான அதன் தலைவர்களும் மற்றும் அமைச்சர்களும் அதிலிருந்து தப்பித்து வெளியேற வேண்டும் எனவும் .அதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ், கேட்டுக்கொண்டார்.
ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம்தேவ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி மூழ்கி கொண்டிருக்கிறது. அதன் தலைவர்களும் அமைச்சர்களும் தான். இந்நிலையில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா அவரும்தான். ஆகவே அனைவரும் அதிலிருந்து அனைவரும் தப்பி வெளியே வந்து விடுங்கள் என கேட்டுக்கொண்டார் ராம்தேவ்.இல்லாவிட்டால் கப்பலோடு சேர்ந்து நீங்களும் மூழ்கி விடுவீர்கள் என்றார்.
மேலும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு எதிரான பிரசாரம் செய்த அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக குற்றம் சுமத்தினார்.கெஜ்ரிவால் தொடக்கத்தில் ஊழலுக்கு எதிராக போராடியதாக காட்டி பின்னர் இடையில் பாதை மாறிவிட்டார் என குற்றம் சாட்டினார்.
10 கோடி மக்கள் இலக்கு:
நாங்கள் மகா ஷிவிர் எனும் பேரணியை அடுத்தமாதம்(மார்ச்) 23 ஆம் திகதியில் தொடக்க உள்ளோம். அது பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அந்த பேரணி இரு்க்கும் அதன் மூலம் 10 கோடி மக்களை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உள்ளிட்ட நாடு முழுவதுமிருந்து திரட்ட உள்ளோம். அது வலுவான பாதையாக மட்டுமல்லாமல் இந்திய கலாச்சாரத்துக்குட்பட்டிருக்கும் என்றார்.மேலும் அது மோடிக்கும் ஆதரவாகவும் இருக்கும் என்றார்.
அரசியலில் ராகுல் ஒரு அப்பாவி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி துணை தலைவர் ராகுல் அரசியல் துறையில் ஒரு அப்பாவி என்றும் 1984ல் நடந்த சீக்கியர்கள் கலவரங்களை சொன்னதில் உண்மையுடன் இடைச்செருகலும் இருந்தது என்றார் ராம்தேவ்.


Post a Comment