GuidePedia

0
வரும் மக்களவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
அமைதி, வளம், முன்னேற்றம் என்பதே அதிமுக கூட்டணியின் கொள்கை முழக்கம் என்று கூறினார் முதலமைச்சர் ஜெயலலிதா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, தா பாண்டியன் ஆகியோர் முதல்வரைச் சந்திக்க மதியம் 1.20க்கு வந்தனர். சுமார் 25 நிமிடங்கள் சந்திப்பு இருந்தது. பின்னர் 1.45க்கு வெளியே வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, இந்திய கம்யூ., கட்சியோடு அதிமுக கூட்டணி அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஜெயலலிதா, தொகுதி, போட்டியிடும் விவரங்கள் அனைத்தும் பின்னர் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
ஜெயலலிதா பிரதமர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உண்டா என்பது பற்றி ஏ.பி. பரதனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,
கூட்டணி வெற்றி பெறும் போது அதற்கான வாய்ப்பு தானாக வரும்; பிரதமர் வாய்ப்பு அமையும் என்றார். மற்ற விவரங்கள் எல்லாம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் அவர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரகாஷ் காரத் நாளை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

 
Top