சாவகச்சேரி புளியடி சந்தி என்று அழைக்கப்படும், சப்பச்சிமாவடி வீதிக்கு புகையிரத கடவை பாதை நிறுவப்படவில்லை. எனவும் மாறாக, அதற்கடுத்துள்ள, யாருமே அதிகம் பயன்படுத்தாத,வீதிக்கு புகையிரத கடவை பாதை அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளானர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது..
புளியடி சந்திக்கு தான் கடவை பாதை அமைப்பதற்கு கல்லு பறிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தனிப்பட்டவர்களின் வியாபார நோக்கத்திற்காக அவர்களின் செல்வாக்கினால், புளியடியில் பறித்த கல்லு திரும்ப ஏற்றப்பட்டு, அடுத்துள்ள வீதிக்கு கடவை பாதை போடப்பட்டுள்ளது.அதிகமான மக்கள் பயன்படுத்தும் பாதையை மூடிவிட்டு தனிப்பட்ட ஒருவருக்காக பாதையை மாற்ற முயற்சிக்கும் அதிகாரிகளை இனம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்!
அல்லாரை மற்றும் சப்பச்சிமாவடி பகுதிவரையுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதியை மூடிவிட்டு, ஓரிருவர் மட்டுமே பயன்படுத்தும் வீதியை திறக்க முயற்சிப்பது ஏன்? மற்றைய பாதையை மூடவேண்டும் என்பது எமது ன் கோரிக்கையல்ல….புளியடியில் கட்டாயமாக புகையிரத கடவை பாதை வேண்டும் என்பதே தமது கோரிக்கை என தெரிவித்தானர்.

Post a Comment