GuidePedia

அமெரிக்க உளவுநாயை சிறைப் பிடித்ததாக தாலிபன்கள் அறிவிப்பு - டுவிட்டரில் படம் வெளியீடு
 அமெரிக்காவின் உளவு நாய் ஒன்றை சிறைப் பிடித்துள்ளதாக தலிபான்கள் தமது  சமூகவலைதளமான டுவிட்டரில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான் படையினர், தங்களைப் பற்றி துப்பறிய அனுப்பப்பட்ட அமெரிக்க படையைச் சேர்ந்த உளவு நாய் ஒன்றை சிறைபிடித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக கறுப்பு நிறப் பெல்ட் அணிந்துள்ள நாய் ஒன்றின் புகைப்படம் ஒன்றை தங்களது டுவிட்டர் இணைய பக்கத்தில் தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்துடன் கூடிய செய்தியில், சம்பந்தப் பட்ட அந்த உளவு நாயை கடந்த டிசம்பரில் பிடித்ததாகவும், நாய் மீது ஒரு டார்ச் விளக்கு, சிறிய கேமரா மற்றும் செயற்கைகோள் உதவியுடன் அது இருக்கும் இடம் காட்டும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டடு இருந்ததாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்
 
Top