GuidePedia

0

ஊடகவியலாளர் ஒருவரை கடத்தி சென்று கற்பழித்தார் என்கிற குற்றச்சாட்டில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார். பிலியந்தலை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த திம்பு நெலிகா சிரோமலா என்கிற உத்தியோகத்தரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போட நீதிமன்ற உத்தரவிட்டது.

ஊடகவியலாளர் இந்திரஜித் சுபசிங்கவின் வீட்டுக்குள் புகுந்து, படுக்கையறைக்குள் பிரவேசித்து, ஊடகவியலாளரின் 07 வயது பிள்ளையை கத்தியை காட்டியும், ஊடகவியலாளரின் மனைவியை துப்பாக்கியை காட்டியும் இப்பொலிஸ் அதிகாரி மிரட்டினார் என்றும் பின் ஊடகவியலாளரை பலவந்தமாக கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல்கள் செய்தார் என்றும் நீதிமன்றத்துக்கு முறையிடப்பட்டு உள்ளது.

பெண் அதிகாரி தலைமறைவாகி இருந்த நிலையில் சட்டத்தரணி ஒருவர் மூலம் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Police_Girl Police_Girl_Maha


Post a Comment

 
Top