GuidePedia

0
பிள்ளையைப் பாடசாலைக்குச் சோ்ப்பது முதல் சகல விடயங்களையும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியே பெற்றுக் கொள்ளவேண்டிய சூழ் நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்தார்.
 
மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான சிஹல உரிமய கட்சியைச் சோ்ந்த உதய கம்மன்பில மல்வத்தை மகாநாயக்கா தேரரைச் சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்ட போதே மகாநாயக்க தேரர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
 
இன்று ஒரு பிள்ளையைப் பாடசாலைக்குச் சோ்க்கவும் வீதியில் இறங்கி ஆர்பாட்டம் செய்ய வேண்டீயள்ளது. எல்லாமே ஆர்பாட்டமாகி விட்டது. நாட்டில் மது, மாது, சுது என்று எல்லாம் சர்வசாதரணமாகி விட்டது இவற்றை நிறுத்த நடவடிக்கை எக்க வேண்டும். அனேக அரசியல் பிரமுகர்கள் தோ்தல் காலங்ளில் தேவையில்லாத செலவினங்களை அதிகரித்து பெரிய வர்த்தகப் புள்ளிகளிடம் இருந்து பண உதவி பெறுகின்றனர். தோ்தலில் வெற்றி பெறறும் அவர்களுக்கு கைமாறு செய்ய வேண்டிவருகிறது. ஆப்படியான சந்தர்ப்பங்களிலேதான் இவ்வாறான ஊழல் மோசடிகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. மேறபடி விடயத்தைத் தவிர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
 
ஆஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீபுத்தரகித தேரரை சந்தித்த போது அவர் தெரவித்ததாவது-
 
பணம், பலம், அதிகாரம் நிறைந்தவர்கள் அரசியலுக்கு வந்ததும் மேலும் மேலும் பணமீட்ட முற்படுகின்றனர். இந்த நடை முறையை மாற்றி வாக்களிக்கும் தன்மை எம்மில் ஏற்பட வேண்டு் என்று கூறினார்.

Post a Comment

 
Top