GuidePedia

0
சுவிஸில் புகழ்பெற்ற ரயில் நிலைய சுவர் கடிகாரங்கள் தனது நிமிட முள்ளை இழந்து வருகின்றன.
சுவிஸர்லாந்தின் ரயில் நிலையங்களில் இருக்கும் பெரிய சுவர் கடிகாரங்கள் கடந்த 50 வருடங்களாக அந்நாட்டில் புகழ் பெற்றவை.
இந்த கடிகாரங்களில் உள்ள நிமிட முள்ளானது தொலைத்தூரங்களில் இருந்தும் பார்க்கக் கூடியதும், கவரக் கூடியதுமாக சிகப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சிகப்பு நிற நிமிட முள் இன்னும் சிறிது காலத்தில் மறைந்து விடப் போகிறது. இந்த நிமிட முட்களை பழுது பார்க்கும் செலவுகள் அதிகம் என்பதே இதற்கு காரணம். அத்துடன் இவற்றுக்கான உதிரி பாகங்களும் கிடைப்பதில்லை.
ஒரு கடிகாரத்தின் நிமிட முள்ளை பழுது பார்க்க 3,250 பிராங்குகள் செலவிடப்படுவதாக சூரிச் செய்திதாள்கள் புதன் கிழமை செய்தி வெளியிட்டிருந்தன.
புதிதாக கொள்வனவு செய்யும் முள்களின் விலைகள் அதிகம் என்பதாலும் பழுது பார்க்கும் செலவும் அதிகம் என்பதாலும் அவற்றை பழுது பார்ப்பதில்லை என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சுவிஸ் ரயில் நிலைய அதிகாரி லியோ மேயர், இந்த நிமிட முள்கள் ரயில் நிலையங்களின் அடையாளமாகவும், சுவிஸ் நேரம் தவறாமைக்கும் பெயர் பெற்றவை என பல வருடங்களாக புகழ்பெற்று விளங்குகின்றன.
இந்த நிமிட முள்களை சுவிஸ் ரயில்வே பொறியியலாளர் ஒருவர் வடிவமைத்துள்ளார். அதில் சிகப்பு நிறத்தில் வட்ட வடிவான வடிவமைப்பு உள்ளது என கூறியுள்ளார்.

Post a Comment

 
Top