GuidePedia

0
கடந்த சில நாட்களாக கடும்குளிர் காலநிலை காரணமாக நுவரெலியாவின் பல பகுதிகளில் பனிகொட்டுகின்றது. 
 
பல இடங்கள் பனிமூட்டத்துடன் காட்சியளிப்பதுடன் சுற்றுலா பயணிகளை வருகை தந்து பார்வையிடும் படி நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவிக்கின்றார். 
 
இன்று காலை நுவரெலியாவில் சில இடங்களில் 
 
 
இங்கு ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் 5-6 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகின்றதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 
இவ்வாறு காலநிலை காணப்பட்டால் மரக்கறி வகைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார். 
 
இன்று காலைவேளையில் மலையகத்தில் பல பாகங்களில் அதிக பனிமூட்டத்துடன் குளிரும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top