GuidePedia

பிரிட்டனைச் சேர்ந்த சாகச வீரர் ஒருவர் படகோட்டம், சைக்கிளோட்டம், ஓட்டம் ஆகியவற்றின் மூலம் உலகை சுற்றிவந்துள்ளார். 

சாகசம் புரிய விரும்பும் பலருக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதோ அல்லது அத்திலாந்திக் சமுத்திரத்தை நீந்திக் கடப்பதோ திருப்தியானதாக இருக்கக்ககூடும். ஆனால், ஜேம்ஸ் கெட்செலுக்கு இவை எதுவும் போதுமானதாக தோன்றவில்லை. அதனால் படகோட்டம் நீச்சல், சைக்கிளோட்டம் மூலம் உலகை சுற்றி வருவதற்கு அவர் தீர்மானித்தார்.

ஏற்கெனவே படகு மூலமும், ஸ்பெய்னின் லா கொமேரா தீவிலிருந்து அன்டிகுவாவுக்கு 110 நாட்களில் துடுப்பு வலித்து படகில் சென்ற அவர், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு 6 வாரங்களை செலவிட்டார்.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக 29,000 கிலோமீற்றர் தூரம் சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர், நேற்றுமுன்தினம் தெற்கு லண்டனின் கிறீன்விச் நகரை சென்றடைந்தார்.  இந்த சாகசரம் சுப்பர் ட்ரையத்லன் என குறிப்பிடப்படுகிறது. 

7 வருடங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கி கால்களிலும் கையொன்றிலும் முறிவு ஏற்பட்ட பின்னர் இத்தகைய சாகசத்தை ஜேம்ஸ் கெட்செல் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



அவ்வேளையில் அவர் மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்படலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவர் மீண்டும் எழுந்த நடந்ததுடன் அவர் இப்பாரிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

 
Top