இந்தியா மற்றும் இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவுள்ளதாக இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பலர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சந்திப்பின் போது, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில், தமது மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள் என, இந்திய மீனவர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும், இலங்கையின் கடல் எல்லையை மீறி பிரவேசித்த 91 இந்திய மீனவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய கடல் எல்லையை மீறிய 25 இலங்கை மீனவர்களும், 5 படகுகளும் இந்திய பாதுகாப்பிரிவின் பொறுப்பிலுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment