GuidePedia

0
யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துக்களின் சேதம் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் இறுதி அறிக்கையை, அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் புள்ளிவிபரங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை தற்போது நிறைவு பெற்றுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.சி.எ.குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல்  திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

 
Top