GuidePedia

0

images

நெய்வேலியை அடுத்த சேப்ளாநத்தத்தை சேர்ந்தவர் அஞ்சாப்புலி, தொழிலாளி. இவருக்கு மனைவியும், லலிதா (வயது 10), அபிராமி (8), கவுசல்யா (6) என்ற மகள்களும், பரமசிவம் (2) என்ற மகனும் உள்ளனர்.இரவு அஞ்சாப்புலி 500 மி.லி கொள்ளவு கொண்ட 2 பெப்சி குளிர்பான பாட்டில்களை வீட்டுக்கு வாங்கி வந்தார். அஞ்சாப்புலி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அந்த பெப்சி குளிர்பானத்தை குடித்தனர்.

சில நிமிடங்களில் அபிராமி உள்ளிட்ட 3 சிறுமிகளும், சிறுவன் பரமசிவமும் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர். அதனை கண்டு அஞ்சாப்புலியும், அவரது மனைவியும் பயந்து அலறினர். மயங்கிய 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிராமி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.பிறகு அந்த பெப்சி குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று வியாபாரியிடம் விசாரணை நடத்தினர். அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Post a Comment

 
Top