GuidePedia



வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக், தனது லீக்கிற்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இலங்கை கால்ப்பந்தாட்ட லீக் தலைவர் வெற்றிக்கிண்ணத்திற்கான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்தி வருகின்றது.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற போட்டிகளில் அராலி அண்ணா விளையாட்டுக் கழக அணியும், பணடத்தரிப்பு பிறைற் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் வெற்றிபெற்றன.

முதலாவதாக நடைபெற்ற போட்டியில், அராலி அண்ணா விளையாட்டுக் கழக அணியினை எதிர்த்து மூளாய் வளர்மதி விளையாட்டுக்கழக அணி மோதியது. இப்போட்டியில் அண்ணா விளையாட்டுக்கழகம் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் பண்டத்தரிப்பு பிரைற் ஸ்டார்; விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து மானிப்பாய் சென் பீற்றர்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. இப்போட்டியில் பண்டத்தரிப்பு பிறைற் ஸடார் விளையாட்டுக்கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
 
Top