இலங்கையில் மர்மமான முறையில் பலர் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வரும் குழுவிடம், இந்திய அமைதிப் படையினரின் செயல்பாடு குறித்தும் புகார் வந்துள்ளதாக குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெயர் வெளியிட விரும்பாத அந்த மூத்த அதிகாரி கூறுகையில், ""இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி வடக்கு மாகாணப் பகுதியில் நாங்கள் நடத்திய விசாரணையின்போது 25 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு முகாமிட்டிருந்த இந்திய அமைதிப் படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் ஒரு புகார் எங்களுக்கு வந்தது.
எனினும், அந்தக் காலகட்டம் எங்களது விசாரணை எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதால் நாங்கள் அந்தப் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை.
ஒருவேளை இந்திய அமைதிப் படையினர் குறித்து மேலும் பல புகார்கள் வந்தால், அவர்கள் இங்கிருந்த காலகட்டத்தையும் சேர்த்து நாங்கள் விசாரிப்பது பற்றி பரிசீலிப்போம்'' என்று தெரிவித்தார்.

Post a Comment