
‘மலேசியாவின் முன்னணி தமிழ் பத்திரிகையான மலேசிய நண்பன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்திரிகை சுதந்திரத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விளைவிக்கப்பட்ட இடையூறுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் விடுத்து வருகின்றனர்.
தனது மமுக உறுப்பினர் களுடன் முற்றுகையிட்ட டத்தோஸ்ரீ எம்.கேவியஸின் செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
‘தனது அதிருப்தியை கண்டனக்கடிதம் மூலமாகவோ அல்லது மறுப்பறிக்கை வழியிலோ அவர் தெரிவித்திருக்கலாம். அதைவிடுத்து பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு இடையூறும் மன உளைச்சலும் தரும் வகையில் அவரும் அவரின் கட்சி உறுப்பினர்களும் நடந்து கொண்டது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. சிறந்த கல்வியறிவாளரான டத்தோஸ்ரீ கேவியஸ் இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுவதால் அவரின் கட்சியின் தலைமைத்துவத்திற்கு களங்கம் ஏற்படுவதோடு மட்டுமின்றி ஆளுங்கட்சிக்கும் அவர் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எனவே, இவ்விவகாரம் தொடர்பில் டத்தோஸ்ரீ கேவியஸும் அன்றைய தினத்தில் அநாகரிமாக நடந்து கொண்ட அவரின் கட்சி உறுப்பினர்களும் இன்னும் 48 மணி நேரத்திற்குள் மலேசிய நண்பன் நிர்வாகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இல்லையேல், நாங்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு மமுக தலைமையகத்தின் முன் கண்டனக் கூட்டத்தில் ஈடுபடுவோம்’ என கூறியுள்ளார்.
‘ஓட்டுப்போட்டால் சோறு போடுவோம் என்று மமுக பொறுப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கைகள் அடிப்படையில் தான் ஒரு விமர்சன கட்டுரை மலேசிய நண்பனின் ஏவுகணை பகுதியில் இடம் பெற்றது. இலவச உணவு கொடுக்கிறோம் வாக்குப் போடுங்கள் என்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையை குறை கூறும் விதமாகவே அந்த கட்டுரை அமைந்தது. இதில் கேவியசுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் உடன் பாடு இல்லையெனில் அவர்கள் மறுப்பறிக்கையோ அல்லது தன்னிலை விளக்க அறிக்கையோ கொடுத்து வெளியிடச் செய்திருக்கலாம். இதுதான் அரசியல் நாகரீகமே தவிர ஊடக அலுவலகத்திற்குள் புகுந்து அத்துமீறல் புரிவது முறையாகாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் போலீஸ் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆகவே அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை போலீசிடமே விட்டு விடுகிறோம்’ என மலேசிய நண்பன் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நண்பன் அலுவலத்தில் நுழைந்து அராஜகம் புரிந்த ம.மு.க உறுப்பினர்கள், தலைவர் கேவியஸ் ஆகியோரின் செயலுக்கு கோலசிலாங்கூர் வட்டார நண்பன் வாசகர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஒரு தமிழ்ப்பத்திரிகையின் நிருபரையும் மற்றவர்களையும் தரக் குறைவாக பேசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும், தமிழர்களே ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்தது தேசிய கட்சிக்கு அழகல்ல. ஏவுகணை செய்தியில் பொதுவாக எல்லா அரசியலில் கட்சிகளையும் பொது இயக்கங்களையும் பற்றி எழுதப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் நண்பன் அலுவலத்தில் நுழைந்து அராஜகம் புரிந்த ம.மு.க உறுப்பினர்கள், தலைவர் கேவியஸ் ஆகியோரின் செயலுக்கு கோலசிலாங்கூர் வட்டார நண்பன் வாசகர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஒரு தமிழ்ப்பத்திரிகையின் நிருபரையும் மற்றவர்களையும் தரக் குறைவாக பேசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும், தமிழர்களே ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்தது தேசிய கட்சிக்கு அழகல்ல. ஏவுகணை செய்தியில் பொதுவாக எல்லா அரசியலில் கட்சிகளையும் பொது இயக்கங்களையும் பற்றி எழுதப்பட்டு வருகிறது.
மற்ற கட்சிகள், இயக்கங்கள் கட்டுரையை படித்து விட்டு இது போன்ற அராஜகத்தில் ஈடுபடவில்லை. ஆனால் ம.மு.க இப்படிப்பட்ட அராஜகத்தில் இறங்கியிருப்பது தமிழ் சமுதாயத்திற்கும்-தமிழ்ப்பத்திரிகை துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற அராஜகசெயலில் ஈடுபடும் போது அரசியலில் கட்சியையும் தலைவரையும் மக்கள் மதிக்கப்பட்டார்கள்.
தேர்தல் நெருங்கிவரும் போது இப்படிப் பட்ட அராஜக செயலில் ஈடுப்பட்டது. சரியில்லை முறையில்லை, இந்த அராஜகசெயலை கண்டித்து நண்பன் வாசகர்கள் கண்டனம் தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
