எழில்மிகு மலையகயத்தின் வரலாற்றுடன் இணைந்த பன்னகமம் என்னும் மாத்தளையில் அமையப்பெற்றுள்ள சரித்திர புகழ் பெற்ற மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசி மக தேர்த்திருவிழா இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இன்று காலை 10.30 மணியளவில் பஞ்சரத ஊர்திகள் ஆலயத்தை விட்டு வெளியேறி மாத்தளை பிரதான வீதி வழியாக வெளிவீதி உலாவலம் வந்து பின் ஆலயத்தை வந்தடைந்தடையும்.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இத் தேர்த்திருவிழாவை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாத்தளை நகரக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment