GuidePedia

0
ஜெய்பால்குரி : “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போகிறதோ அவ்வளவு நல்லது என்று மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசுகையில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.ஜெய்பால்குரியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது மம்தா கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசு, மாநிலத்தை புறக்கணித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே மாநிலத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த கம்யூனிஸட் கட்சி மாநிலத்தை மோசமான நிலையில் விட்டுச் சென்றுள்ளது. கடந்த ஆட்சியில் மாநிலத்துக்கு தேவையான நிதி ஆதாரங்கள் பெருக்கப்படவில்லை, மத்திய அரசிடம் இருந்து ஏராளமான கடன் பெற்றுள்ளது. தற்போது எனது ஆட்சியில் கடந்த 3 வருடங்களாக மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க மறுத்து புறக்கணித்து வருகிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போகிறதோ அவ்வளவு நல்லது என்றார்.

Post a Comment

 
Top