நெய்வேலி : கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ஊ.மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், கடந்த 1ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடுகின்றனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்பு, அப்பெண் தாண்டவன்குப்பம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை முதலாவது அனல் மின் நிலையத்தின் பின்புறம் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதையடுத்து அவரது சித்தி லட்சுமி, ஏரியின் அருகே சென்று பார்த்த போது மாற்றுத்திறனாளி பெண் மூக்கில் நுரை தள்ளியபடி சடலமாக கிடந்தார். தகவலறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)


Post a Comment