GuidePedia

0
ராகுலுக்கு பெண்கள் முத்தம் கொடுத்து வரவேற்பு

அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு, பெண்கள் திடீரென முத்தம் கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசி நாளான நேற்று கவுகாத்தி பகுதியில் பிரசாரம் செய்தார்.

இதன்போது, கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

அவர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.

“நாட்டின் வளர்ச்சியில் எல்லா துறைகளில் பெண்களின் பங்கு அதிகமாக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், எம்.பி, எம்.எல்.ஏ போன்ற பதவிகளை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் எப்போதும் பாடுபட்டு வருகிறது,” என்று உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியிடம் கை குலுக்க பலர் முண்டியடித்தனர்.

அவர்களில் ஒரு பெண் திடீரென ராகுலை நெருங்கி உச்சந்தலையில் முத்தமிட்டார்.

புன்னகையுடன் ராகுல் அமைதியாக இருந்தார்.

திடீரென இன்னொரு இளம்பெண் வந்து, ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



Post a Comment

 
Top