GuidePedia


பாடசாலைக்கு முகத்தை மூடி புர்கா அணிந்து செல்வதற்கு சுவிட்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தில் உள்ள கெர்புருக் என்ற மாவட்டத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சோமாலியா நாட்டை பூர்வீகமாக கொண்ட முஸ்லீம் மாணவிகள் இருவர் புர்கா அணிந்து செல்வதற்கு பாடசாலை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அம்மாணவிகளின் பெற்றோர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக அம்மாவட்ட மக்களிடம் பொதுஜனவாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது பாடசாலைகளுக்கு புர்கா அணிந்து செல்வதை தடை செய்ய வேண்டும் என்பதற்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 
Top