GuidePedia


-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா


யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த யூனியன் வங்கியின் யாழ்.நகர கிளை இன்று ஆஸ்பத்திரி வீதியிலுள்ள பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடமாற்றப்பட்டுள்ளது.இந்த கிளை வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நிலாந்த டி சில்வாவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வங்கியின் பிராந்திய முகாமையாளர் கதிர்காமத்தம்பி நிசாகரன், யாழ். கிளையின் முகாமையாளர் அருள்சோதி பிரவீன்ஸனன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.யூனியன் வங்கிக்கு நாடளாவிய ரீதியில் 52 கிளைகளும் யாழ்.மாவட்டத்தில் அச்சுவேலி, சுன்னாகம் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் மூன்று கிளைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Top