GuidePedia

வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் 2013 டிசெம்பர் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 4.5 பில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் 2014ம் ஆண்டிற்கான நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 8.8 வீத அதிகரிப்பு என்பதுடன் நிறுவனத்தின் தேறிய வருமானம் கடந்த வருடத்தில் 589 மில்லியனில் இருந்து 311 மில்லியன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஒன்பது மாதகாலத்திற்குள் நூற்றுக்கு 20.0வீத வரை அதிகரித்த சம்பள உயர்வானது இந்த வருமானம் வீழ்ச்சியடைவதற்கு பிரதான காரணமென நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்பாராத சீரற்ற காலநிலை காரணமாக தேயிலைச் செடிகள் நாசமாகியமையும் இந்த வருமான வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் மூன்றாம்; காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்தவருட மூன்றாம் காலாண்டுக்கு சமாந்திரமாக வருமானமானது நூற்றுக்கு 13.2 விகித அதிகரிப்பு வேகமானது 1.7 பில்லியன் வரை அதிகரித்துள்ளது.

வட்டவளை பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி கருத்து தெரிவிக்கையில், 

நிறுவனத்தின் பாம் ஒயில் மற்றும் தேயிலை உற்பத்திகள் இந்த கலாண்டில் திருப்தியளிக்கக் கூடியதாக அமைந்தன. பல்வேறு சவால்கள் நிறைந்த வருடத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நிறுவனத்தின் பாம் ஒய்ல் உற்பத்தியானது இந்த காலாண்டில் நூற்றுக்கு 5.4 வீதத்தினால் அதிகரித்துச் சென்றுள்ளதுடன், தேயிலை உற்பத்தியினால் ஈட்டிய வருமானமானது நூற்றுக்கு 6.7 வீதத்தால் அதிகரித்துள்ளது
 
Top