GuidePedia

0


இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் உடனடியாக நாடு கடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
 
புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வீ.வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ``ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக தமிழக அரசாங்கம் இவ்வாறு தீர்மானிக்க முடியாது. இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றார்.
 
இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

 
Top