GuidePedia

நெல்லை: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நேற்று முன்தினம் ஜிஎஸ்எல்வி டி-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்டிருந்த ஜி சாட்-14 என்ற செயற்கை கோள், இப்போது பூமியை சுற்றி வருகிறது. இந்திய தொழில்நுட்பத்தில் உருவான கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்த இந்த ராக்கெட் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி, திருவனந்தபுரம் வலியமாலாவிலுள்ள இஸ்ரோ திரவ இயக்க திட்ட மையங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இத்திட்டத்தில் முக்கிய பங்காற்றினர்.

கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் பங்கு வகித்த மகேந்திரகிரி விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களை இஸ்ரோ தலை வர் ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். இதற்கிடையே மகேந்திரகிரி விண்வெளி மையத்தில் அடுத்த கட்ட முயற்சியாக உயர் தொழில்நுட்ப இன்ஜின் தயாரிப்பதற்கான பரிசோதனை தொடங்கப்படுகிறது. இதனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் வரும் 10ம் தேதி மகேந்திரகிரி ஆய்வு மையத்திற்கு வருகிறார்.

எக்ஸ்ட்ரா தகவல்

40க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப நிபுணர்களின் கூட்டு முயற்சியில் கிரையோஜெனிக் இன்ஜின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது
 
Top