ஏழாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் முதல் சுற்று ஏலத்தில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன, டில்சான், மெத்தியூஸ் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோர் எந்தவொரு அணியினராலும் கொள்வனவு செய்யப்படாத அதேவேளை அஜந்த மெண்டிஸ், குஷோல் சில்வா, பிரசன்ன ஜயவர்தன ஆகியோரும் எந்த அணியினராலும் கொள்ளவனவு செய்யப்படவில்லை.
இதேவேளை சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 1 கோடிக்கு பெங்களூர் அணியிராலும் திஷர பெரேரா 1.6 கோடிக்கு பஞ்சாப் அணியினராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் யுவராஜ்சிங் அதிகூடுதலாக 14 கோடிக்கு பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியினரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.
ஏப்பரல் மாதத்தில் இடம்பெற உள்ள இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர்களை கருத்திற்கொண்டே இலங்கை வீரர்களை எந்த அணியினரும் கொள்ளவனவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஐ.பி.எல். 7ஆவது தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரமபமானது. 219 சர்வதேச வீரர்கள் உட்பட 514 பேர் ஏலப்பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.
இந்த ஆண்டு முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏலம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்டு மேட்லி ஏலத்தை நடத்தினார். முதலில் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் ஏலம் விடப்பட்டார். அவருக்கான அடிப்படை விலை 2 கோடியாக இருந்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் போட்டி போட்டு முடிவில் டெல்லி அணி 5 கோடி ரூபாய்கு முரளி விஜயை வாங்கியது.
இதையடுத்து இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர் பீட்டர்சன் ஏலத்துக்கு விடப்பட்டார்.
அவரை டெல்லி அணி போட்டி அட்டையை (match card) பயன்படுத்தி அவரை ரூ.9 கோடிக்கு எடுத்தது.
பின்னர் யுவராஜ்சிங் ஏலம் விடப்பட்டார். அவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக தொகையான ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் நிர்ணயித்த தொகையை விட 7 மடங்கு விலைக்கு போனார்.
கொல்கத்தா அணிக்கும், பெங்களூர் அணிக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக யுவராஜ் சிங் விலையும் உயர்ந்தது. தென்னாபிரிக்கா வீரர் கலிசை ரூ.5 ½ கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்தது. அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த ஷேவாக் ரூ.3.2 கோடிக்கு மாத்திமே விலை போனார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை எடுத்தது.
இதனையடுத்து அவுஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வொர்னரை ஐதராபாத் அணி ரூ.5½ கோடிக்கு எடுத்தது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ரூ.12½ கோடிக்கு டெல்லி அணி எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 6 மடங்குக்கு அதிகமாக விலை போனார். டூபெலிசிசை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ4.75 கோடிக்கு தக்க வைத்தது.
மேலும் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 3.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மைக் ஹஸியை 5 கோடிக்கு மும்பை அணி தேர்வு செய்துள்ளது.
இந்தியாவின் அமித் மிஸ்ராவை 4.75 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான சகீர் கானை 2.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
இந்தியாவின் புஜாரா 1.9 கோடிக்கு பஞ்சாப் அணியில் இடம்பிடித்தார்.
தென்னாபிரிக்காவின் டுமினி 2.2 கோடிக்கு டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியாவின் ரெபின் உத்தப்பா 5 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியா அணியின் பிராட் ஹொட்ஜ் 2.4 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியா அணியின் ஷான் மார்ஷ் 2.2 கோடிக்கு பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியாவின் மனோஜ் திவாரி 2.8 கோடிக்கு டெல்லி அணியில் இடம்பிடித்தார்.
மேற்கு இந்தயத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான டுவானே ஸ்மித்தை 4.5 கோடிக்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது.
தென்னாபிரிக்காவை சேர்ந்த டீ கொக் 3.50 கோடிக்கு டெல்லி அணியில் இடம் பிடித்தார்.
இந்தியாவை சேர்ந்த சாகா 2.20 கோடிக்கு பஞ்சாப் அணியில் இடம் பிடித்தார்.
இந்தியாவை சேர்ந்த பார்த்திவ் பட்டேல் 1.4 கோடிக்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்தார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் 4 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்தார்.
இந்தியாவின் யூசுப் பதான் 3.25 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் திசர பெரேரா 1.6 கோடிக்கு பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் எல்பி மோர்கெல் 2.4 கோடிக்கு பெங்களூர் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியாவின் டேவிட் ஹஸி எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை.
இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான இர்பான் பதான் 2.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹாசன் 2.8 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்தார்.
அவுஸ்திரேலியாவின் மேத்யூ வேட் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான அசோக் திண்டா 1.5 கோடிக்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான இசாந்த் சர்மா 2.6 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 4.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான முகம்மது ஷமி 4.25 கோடிக்கு டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
மேற்கு இந்தயத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளரான ரவி ராம்பால் 90 லட்சத்திற்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான உமேஸ் யாதவ் 2.6 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் பிரவீண் குமார் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளரான வினய் குமார் 2.8 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் 2.8 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லா 4.25 கோடிக்கு கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ளார்.
இலங்கையின் அஜந்த மெண்டிஸ் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான பரக்யான் ஓஜா 3.25 கோடிக்கு மும்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்தின் நாதன் மெக்கல்லம் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சர்மா 1.9 கோடிக்கு டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் ரொபின் பீட்டர்சன் எந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை.
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 1 கோடிக்கு பெங்களூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் இளம் ஆட்டக்காரர் சவுரவ் திவாரியை ரூ.70 லட்சத்திற்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ஜிம்பாபவே அணித் தலைவர் பிரண்டன் டெய்லரை ரூ.30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது.
அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர்; கிளேன் மெக்ஸ்வேலை ரூ.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
நியூலாந்தின் அதிரடி வீரர் கொரி ஆண்டர்சன் ரூ. 4 கோடியே 50 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் இளம் வீரர் அபிஷேக் நாயர் ரூ.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் லக்ஷமிபதி பாலாஜி ரூ. 1 கோடியே 80 லட்சத்திற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹாரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் வருண் அரோன் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பரவீந்தர் அவானா ரூ.65 லட்சத்திற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உட்கன்ட் ரூ. 2 கோடியே 80 லட்சத்திற்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இன்று பகல் இடம்பெற்ற ஏலத்தில் விலை போகாத வீரர்கள்
டெரன் பிரோவா(மேற்கு இந்திய தீவு), கெமரூன் ஓயிட்(அவுஸ்திரேலியா), அலக்ஸ் ஹல்ஸ்(இங்கிலாந்து), சம்யூல்ஸ்(மேற்கு இந்திய தீவு), பத்ரிநாத் (இந்தியா), இயன் பெல்(இங்கிலாந்து), தமீம் இக்பால்(பங்களாதேஷ்), மார்டின் குப்தில்(நியூசிலாந்து), லண்டல் சிம்ன்ஸ்(மேற்கு இந்திய தீவு), டீம் பெயின்(அவுஸ்திரேலியா). குஷோல் சில்வா(இலங்கை), தினேஷ் ரம்டின்(மேற்கு இந்திய தீவு), பிரசன்ன ஜயவர்தன(இலங்கை), சார்லஸ்(மேற்கு இந்திய தீவு),டேனியல் கிறஸ்டன்(அவுஸ்திரேலியா), ரவி போப்பாரா(இங்கிலாந்து), லூக் ரையிட்(இங்கிலாந்து), ஆர்.பி.சிங்(இந்தியா), பிரேட் லீ(அவுஸ்திரேலியா), முனாப் படேல்(இந்தியா).

Post a Comment