பிரித்தானியாவிலுள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் குழுமியிருந்து பல மாணவர்களுக்கு முன்னிலையில் ஒட்டகச்சிவிங்கி ஒன்றை வெட்டி சிங்கத்துக்கு உணவளித்து கொடூரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கொடூரமான சம்பவம் டென்மார்க்கிலுள்ள கொபென்ஹாகென் மிருகக்காட்சிச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் மிருக உரிமைகள் தொடர்பாக பிரசாரம் செய்பவர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மிருக உரிமைகளை மீறுவதாகவும் கொடூரமான செயல் எனவும் மிருக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான 2 வயதான மரியஸ் எனும் ஒட்டகச்சிவிங்கியே கொல்லப்பட்டுள்ளது. இது 11.8 அடி உயரமானது. ஒட்டகச்சிவிங்கிகள் தேவைக்கு அதிகமாக இருந்தமையினாலேயே மரியஸ் கொல்லப்பட்டமைக்கு காரணமாம்.
இதேவேளை மிருக ஆர்வலர்கள் 20 ஆயிரம் கையொப்பமிட்டு இணையத்தளம் மூலம் புகார் செய்து மரியஸை மீட்க எடுத்த முயற்சிகளும் மிருகக்காட்சிச்சாலையினால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
விலங்குகளின் மொத்த சனத்தொகையை பேணுவதற்கு மான்களை விலக்குவது போன்தொரு செயற்பாடே இதுவும் என அந்த மிருகக்காட்சிச்சாலையின் அறிவியல் பணிப்பாளர் பெங்ட் ஹொல்ட்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்வி நடவடிக்கைக்காவே மாணவர்கள் முன்னிலையில் இந்த ஒட்டகச்சிவிங்கு வெட்டி சிங்கத்துக்கு உணவளிக்கப்பட்டதாக மிருகக்காட்சிச்சாலை தெரிவித்துள்ளது.
இதுபோன்று வருடத்துக்கு சுமார் 20-30 விலங்குகள் மேற்படி மிருகக்காட்சிச்சலையில் அழிக்கப்படவதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

Post a Comment