GuidePedia

0
பன்னல வாகன விபத்து; பெண் பலி, குழந்தை காயம்

பன்னல, குளியாபிட்டிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தையொன்று காயமடைந்துள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு 7  மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது குழந்தையுடன் வீதியைக் கடக்க முற்பட்டபோ​தே இந்த பெண் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும், சந்தலங்காவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் பெண் உயிரிழந்துள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக குழந்தை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top