சுமார் 1275 வருடங்களுக்கு முன்னர் பூமியதிர்ச்சியினால் அழிந்துபோன தேவாலயம் ஒன்று அண்மையில் புவியியல் ஆராய்ச்சிக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக அறியப்பட்ட நிக்காயே என அழைக்கப்பட்ட துருக்கியின் பேர்ஷா மாகாணத்திலுள்ள இஷ்னிக் நகரின் இஷ்னிக் குளத்திலேயே இந்த தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பெரிய தேவாலயம் புனித நியோபைடொஸ் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது. 303ஆம் ஆண்டு ரோமன் படை வீரர்களால் கொல்லப்பட்ட புனிதர் நியோபைடொஸின் நினைவாக இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதன் கட்டுமானப் பணிகள் பூரணமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.740ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் இந்த தேவாலயம் உடைந்துள்ளது. அத்துடன் குளத்திலும் மூழக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் பழைமையான வரலாற்று முக்கியமான விடயங்களை புகைப்படமெடுக்கச் சென்ற குழுவொன்று இஷ்னிக் குளத்தினையும் வானிலிருந்து புகைப்படமெடுத்துள்ளது. இதன்போதே புனித நியோபைடொஸ் தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடினமான சூழ்நிலையில் இஷ்னிக் பிரதேச மக்கள் புனிதர் நியோபைடொஸ் உடலிடம் உதவி கேட்டுவந்ததாக ஒரு வதந்தி உண்டு.

Post a Comment