GuidePedia

0


களனி பல்கலைக்கழக வளாகத்தில் 13  மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

 

கலை மற்றும் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கஞ்சா புகைத்துக் கெண்டிருந்த நிலையில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழுவினரின் உதவியுடன் கிரிபத்கொடை பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.


மாணவர்களிடமிருந்த 13 கஞ்சா சுருட்டுக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் நேற்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர் மேலதிகவிசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Post a Comment

 
Top