மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த போது அங்கிருந்த சட்டத்தரணி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 66 வயதான சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஆசனத்திலேயே வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளார். உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


Post a Comment