மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து 39 உறுப்பினர்களை தெரிவு செயவதற்காக 15,90,076 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக இம்மாவட்டத்திலுள்ள 13 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் இம்முறை 946 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
அரசியல் கட்சிகள் சார்பாக 559 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 387 வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
ஐ.ம.சு.மு. சார்பாக முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க குழுத் தலைவராகவும் முன்னாள் மாகாண அமைச்சரான நிமல் லான்சா குழுவின் உபதலைவராகவும் களமிறங்கியுள்ளனர்.
ஐ. தே. க சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
எட்வர்ட் குணசேகராவும் ஸ்ரீல மு.கா. சார்பாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமும் குழுக்களின் தலைவர்களாக தேர்தலில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment