தற்போது 5 இலட்சம் தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் பணி புரிகின்றனர். இவர்களுள் 60வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாக கடமையாற்றுகின்றனர். இவர்களின் சேம நலன்களை பாதுகாக்க மேற்படி உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பிலிப்பைன்சும்
இந்தியாவும் ஏற்கனவே உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் கீழ்
தொழில் வழங்குபவர் தொழிலாளர்களின் பெயரில் வங்கியில் கணக்கை ஆரம்பித்து அவர்களின் சம்பளத்தை வங்கியில் வைப்புச் செய்து பாஸ் புத்தகத்தை தொழிலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
02 வருட முடிவில் 30 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறை அதே தொழில் வழங்குபவரிடம் திரும்பி வருவதாக இருந்தால் அவருக்கு மேலதிகமாக ஒரு மாத சம்பளம் வழங்குதல்.
கடவுச்சீட்டு வீட்டு பணியாளரிடம் இருத்தல் வேண்டும்.
சேர்த்துக்கொள்வதற்கு தொழிலாளரிடமிருந்து எந்தவித கட்டணமும் அறவிடப்படக்கூடாது.

Post a Comment