GuidePedia

0
போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
 
X/25 524376என்ற இலக்கத்தையுடைய 1800 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. எனவே மேற்படி தொடர் இலக்கத்தை கொண்ட போலி நாணயத்தாள் கிடைக்கப்பெறுமாயின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
பியகம பிரதேசத்தில் இன்று காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான 530 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top