GuidePedia

2ஆம் உலக யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்ட சுமார் 1,000 உயர்ரக கார்கள் துருப்பிடித் நிலையில் அண்மையில் ஸ்வீடனிலுள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஸ்வீடனைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் இணைந்தே இந்த கார் களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கார்கள் 2ஆம் உலக யுத்ததின்போது அமெரிக்க படையினரால் ஐரோப்பாவில் கைவிடப்பட்ட கார்களை சேகரிப்பதற்கு 1950களில் உருவாக்கப்பட்டதாம்.

இக்கார் களஞ்சியத்தில் பழையை உயர்ரக கார்களான ஒபெல், போர்ட், வொல்வொ, ஓடி, ஸாப் உள்ளிட்ட காhகள் காணப்படுகின்றன.



குறித்த கார் களஞ்சியத்தினை உருவாக்கிய சகோதரர்கள் இங்குள்ள கார்களில் பாகங்களை விற்பனை செய்துள்ளனர். 1990 களில் அவர்களது வீட்டினையும் கார்களையும் காட்டினுள் கைவிட்டுச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த இடத்திலுள்ள காhகள் இயற்கையுடன் இணைந்து துரு பிடித்த நிலையில் மரங்களுடன் மரங்களாக வாழ்கின்றது. இதனை கார்களின் மயானம் என்கின்றனர்.



குறித்த இடத்தினை 54 வயதான ஸ்வெயன் நொர்ட்ரம் என்ற புகைப்படக் கலைஞர்க படமாக்கியுள்ளனர். 

'இக்காடு அடர்த்தியானது. இதனால் ஓரிரு கார்களை மட்டுமே உங்களால் காணமுடியும். ஏனையவை மரங்களுக்கு நடுவில் இருக்கின்றன. இந்த இடத்தில் நீங்கள் வித்தியாசமாக உணருவீhகள்' என்கிறார் ஸ்வெயன்.


ஸ்வீடனிலுள்ள சில மக்கள் இவற்றினை அழிக்க முற்படுகின்றனர். ஆனால் இந்த கார்கள் இயற்கையுடன் இணைந்துள்ளமையினால் விலங்குகளும் பறவைகளும் கூடுகட்டி வாழ்கின்றன. இதனால் சற்றாடல் ஆர்வலர்கள் இக்கார்களை அழிப்பதனை தடுத்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார் ஸ்வெயன்.

துருப்பிடித்து கைவிடப்பட்ட நிலையிலும் இந்த பழைமையான உயர்ரக கார்களின் பெறுமதி 2 கோடிக்கும் அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

 
Top