GuidePedia

0
தேநீர்க்கடைகளில் தொழில் புரியும் சாதாரண தொழிலாளி ஒருவருக்கே அடிப்படைச்சம்பளம்  ஒன்று வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்நாட்டின் வருவாய்க்காகவே 200 வருட காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் தோட்டத் தோட்டத்தொழிலாளர்களை நாட்கூலிகளாக வைத்திருப்பது அப்பட்டமான அடிப்படை உரிமை மற்றும் மனித உரிமை மீறலாகும். இது தகர்த்தெறியப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டு அணியின் செயலாளர் நாயகமும் அருணலு மக்கள் முன்னணியின் தலைவருமான வைத்திய நிபுணர் கிஷான் மலையகத்தில் நிலவி வரும் காலநிலை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். 
 
ஏற்கனவே பொருளாதார கஷ்டத்திற்கு முகம் கொடுத்து வரும் தோட்டத்தொழிலாளர்கள் இயற்கையின் ஆக்கிரமிப்புகளுக்குள் பாதிக்கப்படும் போது கூட அவர்களுக்கும் உதவும் கரங்களாக எவரும் முன்வருவதில்லை. விசேடமாக தோட்ட நிர்வாகங்கள் இதனை அலட்டிக்கொள்வதாகவே இல்லை. 
 
தேர்தல்களை மையமாக வைத்து தோட்டக்குடியிருப்புப் பகுதிகளுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள் பின்னர் அந்தப்பக்கமே தலைகாட்டுவதாக இல்லை. அடிப்படை சம்பளம் பெற்றுத்தரப்படுவதாகவே ஒவ்வொரு தடவைகளிலும் கூறப்படுகின்றது. இது முற்றிலும் தவறாகும். 
 
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படைச் சம்பளம் என்ற பெயரில் நாட்கூலிக்கான சம்பளமே வழங்கப்படுகிறது. 
 
சாதாரண தேநீர்க்கடையில் தொழில் பார்க்கும் ஒரு தொழிலாளிக்கு கூட மாத இறுதியில் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. அத்துடன் இது அடிப்படைச்சம்பளமாகவே இருக்கிறது. 
 
இவ்வாறான நிலையில் 200 வருட காலமாக இந்நாட்டிற்கு அந்நிய வருவாயை ஈட்டித்தந்து கொண்டிருக்கும் எமது சமூகம் இன்று வரை நாட்கூலி என்ற பட்டத்தையே சுமந்து கொண்டிருக்கின்றது. இது ஒரு பாரிய அடிப்படை மற்றும் மனித உரிமை மீறலாகும். 
 
தோட்டத்தொழிலாளிக்கு அடிப்படைச்சம்பளம்  ஒன்றை நிர்ணயித்து மாதாந்த சம்பள உட்கட்டமைப்புக்குள் அவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது எமது மாறாத நிலைப்பாடாகும். 
 
மலேசியா, இந்தியா ஆகிய ஆசிய நாடுகளில் இந்த நிலை காணப்படுகின்றது. இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டே உள்ளன.
 
தோட்டத் தொழிலாளர்களினதும் தொழிற்சங்கங்களினதும் ஒத்துழைப்புகள் இருந்தால் தோட்டத்தொழிலாளர்கள் மீது குத்தப்பட்டுள்ள நாட்கூலி என்ற  இழிசொல்லை தகர்த்தெறிய முடியும் தோட்டத்தொழிலாளர்களின் விடிவையும் அவர்களது வளமான வாழ்வையும் உறுதிப்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் சமூகக் கடமையும் தொழிற்சங்கங்களுக்கு இருக்க வேண்டும் என்பதே அருணலு மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்பாகும். 
 
தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் மற்றும் அவர்கள் மீதான நாட்கூலி என்று ?????ப்பட்டுள்ள பதம் ஆகியவை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

Post a Comment

 
Top