இலங்கையில் முதற்தடவையாக பாடசாலை
மாணவர்கள் ரயிலில் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த 21ம் திகதியான
வெள்ளியன்றே குறித்த கல்வி சுற்றுலா இடம்பெற்றதாக ரயில்வே திணைக்கள
அதிகாரியொருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
கடந்த 21ம் திகதியான வெள்ளிக்கிழமை கொழும்பு தேவி மகளிர் கல்லூரி
மாணவர்கள் ரயிலில் அநுராதபுரத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ரயிலில் கல்வி சுற்றுலா
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கல்விச் சுற்றுலாவி-ற்கு 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள்
சமூகமளித்திருந்தனர். இந்நிலையில் பேருந்தில் கல்வி சுற்றுலா செல்வதை விட
ரயிலில் செல்வதூடாக பண விரயம் குறைக்கப்படும். எனவே எதிர்காலத்தில் கல்வி
சுற்றுலாக்கள் ரயிலில் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
குறித்த கல்வி சுற்றுலா மருதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது என்றார்.
இதேவேளை ரயில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களை வரவேற்க குறித்த
மாணவர்களின் பெற்றோர் மருதானை புகையிரத நிலையத்திற்கருகில் காணப்பட்டனர்.
இதனால் மருதானை புகையிரத நிலைய வளாகம் அதிர்ச்சியூட்டிய வண்ணம் காணப்பட்டமை
குறிப்பிடத்தக்க விசேட விடயமாகும்.

Post a Comment