தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனான அமிர்தலிங்கம் பகீதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
கோடூரமான பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை பாராட்டிய பகீர்தரன் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் இனம்,மதம் மற்றும் மாகாண பேதமின்றி முன்னெடுப்பதனையிட்டு ஜனாதிபதிக்கு அவர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர். (படங்கள்: ஜனாதிபதி செயலகம்)
