ஹப்புதளை, ஹல்துமுல்ல, ஹாலடுதென்ன பிரதேசத்தில், மூடப்பட்டிருந்த கடையொன்றினுள் நேற்றிரவு நுழைந்துள்ள கொள்ளையர்கள், அங்கிருந்து 231 கிலோ எடையுடைய மிளகினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் சந்தை பெறுமதி 111,035 ரூபா என தெரிவிக்கும் ஹப்புதளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
