GuidePedia


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மீள் நினைவூட்டல் மறைக்கப்பட்ட வரலாற்றிலிருந்து இதுவரை கண்டிராத புகைப்படத் தொடர் கண்காட்சியொன்று இன்று (20) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஐக்கியத்திற்கும் சகவாழ்வுக்குமான மத்திய நிலையம் எனப்படும் சி.ஆர்.சி எனும் நிறுவனம் இந்த புகைப்படக் கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியினை ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் ஆரம்பித்து வைத்தார்.

இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், ஐக்கியத்திற்கும் சகவாழ்வுக்குமான மத்திய நிலையத்தின் தலைவர் எம்.டி.என்.பெரேரா உட்பட பிரதே செயலாளர்கள், அதிகாரிகள், சமய தலைவர்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்று காலை ஆரம்பமான புகைப் படக்கண்காட்சி நாளை மாலை நிறைவு பெறவுள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் விடுதலைப் புலிகளினால் சிறுவர்களை யுத்தத்திற்கு பயன்படுத்தியது, அரசியல் தலைவர்களின் படுகொலைகள் என்பன இந்த புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளதுடன் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மீள் கட்டுமானம், அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் சமாதானம், ஐக்கியம் என்பவற்றை அடையாளப்படுத்தும் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















 
Top