பூண்டுலோயா பிரதான நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 31 கடைகள் எரிந்து நசமாகியுள்ளன.
இதில் சில குடியிருப்புகளும் அடங்கும். இன்று விடியற்காலை 2 மணியளவில்
ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டயர் கடை மற்றும் சில்லறை கடைகள் உட்பட பல கடைகள் எரிந்து
நசமாகியுள்ளன.சடுதியாக பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்காக நுவரெலியா மாநகர
சபை, கொத்மலை பிரதேச சபை ஆகிய தீயணைப்புப்பிரிவின் உதவிகள்
பெற்றுக்கொள்ளப்பட்டதோடு பூண்டுலோயா பொலிஸார், இராணுவம் உட்பட பொதுமக்கள்
ஆகியோர் இணைந்து தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் தீ ஏற்பட்டதுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் கொண்டு வருகின்றனர்.
