GuidePedia

யாழில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 'டில்லு" குழுவுடன் சேர்ந்து இயங்கிய மேலும் நால்வர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் டில்லு குழுவைச் சேர்ந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரை கொக்குவில் தலையாளி பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிஸார் கைது செய்திருந்தனர்.
 
அதனை தொடர்ந்து தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், டில்லு குழு கைது செய்யப்பட்ட கொக்குவில் தலையாளி பகுதியில் வைத்தே இந்த நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் விமானப்படையிலிருந்து விலகியவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
ஜா - எல பகுதியை சேர்ந்த இருவரும் கொட்டாவப் பகுதியை சேர்ந்த ஒருவரும் அங்கொடையை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுளள்னர்.
 
அண்மையில் கைது செய்யப்பட்ட டில்லு குழுவிடமிருந்து இரண்டு இராணுவ சீருடை உட்பட வாள்கள், கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டன. 
 
Top