இலங்கையின் சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலைத்துறையின் மகுடமாக விளங்கும் Hair and Beauty International 2014 நிகழ்வானது பெப்ரவரி 15 முதல் 17 வரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. 17ஆவது தேசிய விருதுகள் மற்றும் வர்த்தகக் கண்காட்சியையொட்டி நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் கீழ் இயங்கும் பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய சபையினதும் (NCED) இலங்கையின் ஹெயார் அன் பியூட்டி கிளஸ்டர் (Hair and Beauty Cluster) அமைப்பினதும் ஒன்றிணைந்த முயற்சியில் இடம்பெறும் இந்நிகழ்வில், சர்வதேச கண்காட்சியும் பிற போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
தொழில்சார் அழகுக்கலை நிபுணர்காளாக விரும்பும் மாணவர்களாகட்டும், தொழிலில் தேர்ந்த நிபுணர்களாகட்டும் Hair and Beauty International 2014 நிகழ்வு இவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தும் களமாகவும் புதிய துறைசார் விடயங்களையும் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமாகவும் விளங்குகின்றது. சர்வதேச தரத்திற்கு இணைவாக உள்நாட்டின் சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலைத்துறையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் இடம்பெறும்
இந்நிகழ்வில் கண்காட்சிகள், நேரடி ஒப்பனை அலங்காரங்கள், விற்பனைக் கூடங்கள் ஆகியன இடம்பெறுகின்றன. இறுதி நாளன்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.
இந்தக் கண்காட்சி பற்றி கருத்து தெரிவித்த நயனா கருணாரத்ன அவர்கள், 'இலங்கை முழுவதிலுமிருந்து இதில் போட்டியாளர்கள் பங்குபெற வேண்டும் என்பதும் அவர்களுக்கு சர்வதேச அறிவைப் பெற்றுக் கொடுப்பதுமே எமது எதிர்பார்ப்பு. தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வெற்றி பெறும் வகையில் உலகின் சிறந்த வெற்றியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. எதிர்காலத்தில் இந்தக் குறிக்கோளை மையம் வைத்தே எமது செயற்பாடுகள் அமையும்.
18 வருடங்களின் பின் Hair World ஆசியாவுக்கு வருகை தருகின்றது. இத்தகைய சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பயிற்றுவிப்பதற்கு Hair and Beauty International வாய்ப்பு வழங்கும் என நான் நம்புகின்றேன்" என்றார்.
Progressive Cut and Style, Day Style on Long Hair, Perm Wrapping, Progressive Total Look,
Evening Hair Style, Bridal Hair Style, Fantasy Hair Style, Bridal Makeup, Fantasy Nails, Stage
Makeup, Bridal Makeup உள்ளிட்ட பிரிவுகளில் 23 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் பயிற்சிக் கல்லூரிகள் பரிந்துரைத்த மாணவர்களுக்கான மூன்று போட்டிகள் உள்ளடங்கலாக கௌரவ விருதான The L’Oreal Colour Trophy கேடயத்தைப் பெற வெற்றியாளர்கள் தகுதி பெறுகின்றனர். உலக சம்மேளனத்தின் நியமங்களைப் பின்பற்றி தகுதி வாய்ந்த மதிப்பீட்டாளர்கள் போட்டியாளர்களை மதிப்பிடுகின்றனர்.
அனைத்து போட்டியாளர்களுக்கும் பங்குபற்றியமைக்கான சான்றிதழ் வழங்கப்படுவதுடன் முதலாவது பரிசிற்குத் தங்க கேடயத்துடன ரூ.50,000 பணப்பரிசும் இரண்டாவது பரிசிற்கு வெள்ளி கேடயத்துடன் ரூ.30,000 பணப்பரிசும், மூன்றாவது பரிசுக்கு வெண்கல கேடயத்துடன் ரூ.20,000 பணப்பரிசும் கிடைக்கின்றது.L’Oreal Colour Award விருது பெறும் மகளிரும் ஆடவரும் L’Oreal கேடயத்துடன் ரூ.50,000 பணப்பரிசு பெறுகின்றனர். மேலும் 2014 மே 3-5 வரை பிராங்பேர்ட், ஜேர்மனியில் இடம்பெறும் OMC (Organization Mondiale Coiffure) World Championships நிகழ்வில் பங்குகொள்வதற்காக விசேட பயிற்சி பெறும் வாய்ப்பும் வெற்றியாளர்களுக்குக் கிட்டுகின்றது.
கௌரவத்துக்குரிய மதிப்பீட்டாளர்கள் குழுவில் OMC பெற்ற சர்வதேச தொழில்சார் நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர். ஆசியாவைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களாகிய Joakim Roos, Education Director - OMC Global, Ms. Emma Ekman, the OMC Silver medalist from Swedenஆகியோர் மதிப்பீட்டாளர்காளகவும் பயிற்றுவிப்பாளர்களாகவும் கலந்து கொள்கின்றனர். இந்த வகையில் போட்டியாளர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் தற்பொழுது இலவசமாக இடம்பெறும் முன்னோட்ட பயிற்சியானது பெப்ரவரி 11 வரை நீடிக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு தமது திறமையை வெளிப்படுத்திக்கொள்ளவும் அதற்காகத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வதற்கு விதிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும் இந்தப் பயிற்சிகள் உதவுகின்றமையால் இவற்றில் பங்குபற்றி வேண்டிய அறிவைப் பெற்றுக்கொள்வது முக்கியமானது.
'இது மற்றைய போட்டிகளைப் போன்றது அன்று" எனக்கூறும் றம்சி ரஹ்மான் அவர்கள் 'இது வெறுமனே வெற்றி தோல்வியைப் பற்றியது அல்ல. ஆனால் சர்வதேச மட்டத்திற்கு ஒப்பான இந்த நிகழ்வில் கலந்துகொள்வது சிறந்த அனுபவத்தையும் வெளிப்பாட்டையும் பெற்றுத் தரவல்லது.
என்னிடம் போதிய அனுபவம் உள்ள போதிலும் இத்தகைய கண்காட்சியில் கலந்து கொள்வதை விரும்புகின்றேன். ஏனெனில் நீங்கள் புதிய பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும். புதியவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் அறிமுகமாவர். இத்துறையில் ஊக்குவிப்பு தேவைப்படும் பலர் உள்ளனர். அவர்களுக்கான களமாக இது விளங்குகின்றது" என்று கூறினார்.
World Championships, இல் கலந்து கொள்வதற்குத் தகுதி பெற்ற Hair and Beauty International 2014 வெற்றியாளர்களுக்கு மேலதிக அனுபவத்தையும் அறிவையும் வழங்குவதற்காக Joakim Roos, Emma Ekman ஆகியோர் முறையே விசேட ஐந்து நாள் பயிற்சி வகுப்பையும் OMC Bronze Diploma Training பயிற்சியையும் நடாத்துகின்றனர்.
போட்டியாளர்கள் பதிவுக் கட்டணத்துடன் ஒவ்வொரு நாளுக்குமான அனுமதிக்கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். Hair and Beauty International 2014 நிகழ்வானது L’Oreal Professional, Sunsilk Shampoo, Wahl Clipper and Fair & Lovely, Natures Secrets Professional Range, L.A.Girl Cosmetics, British Cosmeticsஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெறுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு (011)5736553 / (011) 4383098ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இல 41, றிட்ஜ்வே பிளேஸ், கொழும்பு 04 எனும் முகவரிக்கு விஜயம் செய்யுங்கள்.
ஹெயார் அன் பியூட்டி கிளஸ்டர்
நாட்டின் அனைத்து சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலைத்துறை சார் நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு உள்நாட்டின் அழகுக்கலைத்துறையை மேம்படுத்தும் நோக்கிலானது.
இலங்கை சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் (Sri Lanka
Association of Hairdressers and Beauticians - SLAHAB) தொழில்சார் சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் (Professional Hairdressers & Beauticians Association - PHABA) புத்தாக்க தொழில்சார் சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் (Innovative Professional Hairdressers & Beauticians Association - IPHABA)முதலிய அமைப்புக்களைச் சார்ந்த 17 உறுப்பினர்களை இது உள்ளடக்கியுள்ளது.

Post a Comment