சென்னை: தனது பிறந்தநாளை ஆடம்பரமின்றி எளிமையாக கொண்டாடுங்கள் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காலந்தோறும் திருப்பு முனையை உருவாக்கிடும் கழகத்தின் சாதனைத் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில், தீரர்கள் கோட்டமாம் திருச்சி மாநகரில், கழகத்தின் பத்தாவது மாநில மாநாடு திராவிட இயக்க வரலாற்றின் வைர அத்தியாயமாகி, மாபெரும் வெற்றி மாநாடாக நடந்தேறியிருக்கிறது.
