GuidePedia

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி புதன்கிழமை கூறியதாவது:
நெறிகளுக்கு உட்படாத முடிவுகளை நீதிமன்ற மறுஆய் வுக்கு உட்படுத்தலாம்.தண்டனை குறைப்புக்கும் மன்னிப்பு அல்லது விடுதலைக்கும் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எந்தவித சர்ச்சை
யையும் காங்கிரஸ் எழுப்பவில்லை. பயங்கரவாத தாக்குதலில் பிரதமர் மட்டும் அல்லாமல் மேலும் 17 பேரை . நாடு பலி கொடுத்தது.
பொறுப்பற்ற வகையில் வெளியி டப்படும் அறிக்கைகளை கண்டிக் கிறோம். கொலையாளிகளை விடுவிப்பது என்ற முடிவு, பயங்கர வாதத்தின் கொடூரத்தையும் அரசமைப்புச் சட்டத்தின் உயிரோட்டத்தையும் கருத்தில் கொள்ள தவறிவிட்டது.
விடுதலை செய்வது பற்றியோ மன்னிப்பு வழங்குவது பற்றியோ உச்ச நீதிமன்றம் பேசவில்லை என்றார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தார் சிங்வி. தான் சொன்ன கருத்து கட்சி சார்ந்தது என்றும் அவரவர் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்ல உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: தமிழக அரசு எடுத்த முடிவு கண்டிக்கத்தக்கது.இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்ட என்ன அவசியம் என்றார்.
 
Top