அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - புளியாவத்தை பிரதான வீதியில் பட்டர்கலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியரொருவர் 6 அடி கால்வாய் ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அட்டனிலிருந்து மோட்டார் சைக்கிளில் புளியாவத்தைக்கு பயணித்த அட்டன் பொஸ்கோ கல்லூரியின் ஆசிரியரான வீ.சிவானந்தன் (வயது 45) என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆசிரியர் நேற்று இரவு பத்தனை பிரதேசத்தில் மரண வீடொன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியிலேயே விபத்து சம்பவித்துள்ளது.
சடலம் தற்போது டிக்கோயா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment