சட்டவிரோதமான முறையில் ஒரு கோடி ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளை இந்தியா, பெங்களூருக்கு கொண்டுச் செல்ல முயன்ற பெண்ணொருவர் கட்டுநாயக்க
விமானநிலையத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யுஎல்173 என்ற விமானத்தில் பெங்களூருக்கு செல்லவிருந்த கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 16 கிலோ 600 கிராம் நிறையுடைய ஒரு கோடி ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment