கட்டிடங்களை உருவாக்குவதற்கு பல்வேறு மூலப்பொருட்களினாலான கலவைகளை பயன்படுத்துவார்கள். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வித்தியாசமாக பூஞ்சணத்தினால் (பங்கஸ்) கோபுரமொன்றை உருவாக்கப்படவுள்ளது.
நியூயோர்கள் மோடர்ன் ஆர் பி.எஸ் 1 எனும் நூதனசாலையிலேயே இந்த பூஞ்சண கோபுரம் உருவாக்கப்படவுள்ளது.
சோளததின் பட்டை மற்றும் தாவர பூஞ்சண இழை கொண்டே இக்கோபுரம் வளர்க்கப்படவுள்ளது. இதனால் கட்டிடம் உறுதியாகவும் அதேவேளை சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹை பை என அழைக்கப்படும் இச்சேதன கோபுரத்தினை டேவிட் பெஞ்சமின் எனும் கட்டிடக் கலைஞர் வடிவமைத்துள்ளார். இதனை எதிர்வரும் ஜுன் மாதமளவில் கோடை காலத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
சூடானை காற்றினை உள்ளெடுத்து குளிரான காற்றினை வெளியிடக்கூடியதாக இருக்குமாம் இந்த கோபுரம். கோபுரத்தினைச் சுற்று மக்கள் அமரக்கூடிய வசதிகளும் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூஞ்சண கோபுரமானது மக்களின் கட்டுமான மூலப்பொருட்களில் நிச்சயம் மாற்றத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment