இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் இரணைமடு திட்டம் தொடர்பிலான மற்றுமொரு முக்கிய பேச்சுவார்த்தை இன்று (27) நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் இரணைமடு விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி விவசாயிகள் சிலர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போதிலும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இன்று காலை முதல் மாலை வரை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இரணைமடு திட்டம் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் இங்கு எடுக்கப்பட்டதாக பேச்சுவார்த்தையின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த தீர்மானங்கள் தமக்குத் தெளிவாகப் புரிவதில்லையென கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

Post a Comment