அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி தற்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ மதிப்பீடுகளின் பிரகாரம், 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டிய ஒரு கிலோ சம்பா அரிசி தற்போது 78 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் 2013, 9 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி அதி விஷேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக அரசாங்கம் ஒரு கிலோ கிராம் அரிசிக்கான விலை நிர்ணயத்தை வெளியிட்டது.
இதன் பிரகாரம், கீரி மற்றும் சூதுரு ஆகிய இரண்டு சம்பா அரிசி வகைகளை தவிர கல் அகற்றப்பட்ட ஏனைய சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் விற்கப்பட வேண்டிய சில்லறை விலை 70 ரூபாவாகும்.
சிவப்பரிசி மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விற்பணை விலை 60 ரூபாவாகும்.
ஆனால், புள்ளிவிபரவியல் மற்றும் மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், தற்போது சந்தையில் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 78 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 67ரூபாவாகவும், சிவப்பரிசி ஒரு
கிலோகிராமின் விலை 66ரூபா தொடக்கம் 68ரூபாவாகவும் அதிகரித்துக் காணப்படுவதாக அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Post a Comment