மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின் போது பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரும் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜர்செய்யப்பட்டபோது தலா ஒரு ஒலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதி மன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.
கடந்த செவ்வாய் கிழமையன்று வணக்கஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டபோது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பில் முடிந்தது. இச் சம்பவத்தின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment